• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அறிமுகமாகும் “ஜியோபுக்” லேப்டாப்…

Byகாயத்ரி

Oct 4, 2022

தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம். ஜியோபுக் எனப்படும் இந்த லேப்டாப் அடிப்படை அம்சங்களுடன் ரூ.15 ஆயிரம் விலையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த லேப்டாப் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த 3 மாதங்களில் பொதுசந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.