• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மிரட்டும் கொரோனா…இன்று 1 லட்சத்தை எட்டியது

Byகாயத்ரி

Jan 6, 2022

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதில் பெரும் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றன. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 37,379 பேருக்கும், நேற்று 58,097 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திடீரென உயர்ந்து ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது.