ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம், அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.