• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ByP.Thangapandi

Jan 24, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் மனோஞ்குமார் – ராஜீ தம்பதி., வழக்கறிஞரான மனோஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் ராஜீ வீட்டின் அருகே உள்ள தனது கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் உடைந்த நிலையில் இருப்பதை கண்ட ராஜீ வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ராஜீ, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.