தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபார் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு டாஸ்மார்க் பாரில் இளைஞர்கள் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருந்தபோது பாரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்பொழுது பார் உரிமையாளர் கார்த்திகேயன் என்ற காவலரை தொலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு சென்ற காவலர் கார்த்திகேயன் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் பார் உரிமையாளர்க்கு ஆதரவாக செயல்பட்டதோடு அங்கு மது அருந்தி இருந்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற நபரை கன்னத்தில் அரைந்து மது பிரியர்கள் முன்னிலையில் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மற்றும் அவருடன் இருந்த இளைஞர்கள் ஒன்று கூடி காவலரை சிறைபிடித்ததோடு சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர் .

ஒரு கட்டத்தில் இளைஞர்கள் காவலர் கையை பிடித்து, நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என சவால் விட்டதோடு அடிக்க முயன்றதால் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் என இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது வாகனத்தை எடுத்து விடாமல் சுற்றி வளைத்து தொடர்ந்து மிரட்டினர் .
ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என அந்த காவலர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது இளைஞர்கள் ஒன்று கூடி பின்னாலே சென்று காவலரை துரத்திய சம்பவம் இந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மது போதையில் தாக்கிய காவலரை இளைஞர்கள் ஒன்று கூடி காவலரை சிறை பிடித்து அடிக்க முற்பட்ட சம்பவம் மணிமங்கலம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.