• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..!

Byவிஷா

Oct 10, 2023
மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியில் வசித்து வருபவர்  சின்னச்சாமி.  இவருடைய மனைவி செல்வபிரியா.இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் 3 வயது குழந்தை ஒன்றும் உள்ளது. சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் செல்வபிரியாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  கடந்த சில வருடங்களாகவே  இதனால் செல்வபிரியா மற்றும்  சின்னசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
பலமுறை   செல்வபிரியா தனது தந்தை ஊரான மூணாறுக்கு  திரும்பச் சென்றுவிட்டார்.  பின்னர்  இரு தரப்பிலும் கலந்து பேசி சமாதானப்படுத்தி செல்வபிரியாவை  கணவன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் செல்வபிரியாவுக்கும், சின்னசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து   செல்வபிரியாவின்  கழுத்தை அறுத்து சின்னச்சாமி கொலை செய்துவிட்டார்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  விரைந்து வந்து செல்வபிரியாவின்  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.  அதன்பேரில் சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர்   சின்னசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செல்வபிரியாவின் உடலை  பிரேத பரிசோதனைக்குப் பிறகு  வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.   கணவர் சின்னசாமியின்  குடும்பத்தினர் 5 பேரை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம்  வலியுறுத்தினர். காவல்துறையினர் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.