கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி மாவட்ட விடுதலை நாளாக (நவம்பர் 1) தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.
குமரி மாவட்ட விடுதலை வரலாறு என்பது தனிநபரின் தன்னிச்சையான சாதனையைப் போல தமிழக அரசே முன்னிலைப்படுத்தலாமா…?
சுதந்திரப் போராட்டம் என்பதை தனி மனிதனால் நிகழ்த்தி விட முடியுமா?
குமரி மாவட்ட விடுதலைப் போராட்டத்தின் தியாகிகளை சாதிய கண்ணோட்டத்தில் வகைப்படுத்துகிறதா தமிழக அரசு?*

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே துவங்கப்பட்ட நீண்ட நெடிய விடுதலைப் போராட்டம் குமரி மாவட்டத்தின் விடுதலைப் போராட்டம் அப்படி இருக்க உண்மையான தியாகிகளை புறந்தள்ளிவிட்டு பொய்யான ஒரு வரலாற்றுக்கு துணை போகலாமா அரசு…?
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வரலாற்றை தோண்டி எடுத்து அகழ்வாராய்ச்சி செய்து உலகறியச் செய்கிறோம் என்று சொல்லும்…
தமிழக அரசு தென் தமிழகத்தின் விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களை சாதிய கண்ணோட்டத்தோடு அணுகாமல் அவர்களின் தியாகங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாதா..?
குமரி மாவட்ட விடுதலைக்கு போராடிய தலைவர்களில் தலித் இன தலைவர்களை அடையாளப் படுத்தாமல் தலித் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் திட்டமிட்டு மறைக்கும் செயலுக்கு துணை போகிறதா தமிழக அரசு.?
குமரி மாவட்ட விடுதலைக்காகவும் தாய்த்தமிழகத்தோடு இணைந்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் இன்னுயிர் நீத்த தியாகிகள் எங்கே..? இன்று வரை அந்த தியாகிகளை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு உண்மையான வரலாற்றை சொல்வதற்கு தமிழக அரசுக்கு தயக்கம் என்ன..?*

குமரி மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட “திருவராங்கூர் தமிழ்நாடு காங்கிரஸின்”‘ செயலாளர் ஆக இருந்து குமரி மாவட்டத்தின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்து போராடிய தியாகசீலர் இறச்சகுளம் P.J.பொன்னையா சாம்பவர்.. அவர்களின் வரலாறும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் இந்த காரணத்தால் திட்டமிட்டு மறைத்து தீண்டாமையை கடைபிடிக்கிறதா தமிழக அரசு..?
தலித் மக்களின் பிரதிநிதியாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் A.K. செல்லையா,A. சாம்ராஜ், போன்றோர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைவதற்காக தங்கள் பதவிகளை துறந்த வரலாற்றையும், அந்த தியாகங்களையும், மக்கள் மத்தியில் எடுத்துரைக்க தயங்குகிறதா தமிழக அரசு.?
1948-1954, ஆகிய கால கட்டங்களில் குமரி மாவட்ட விடுதலைப் போரில் துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை இழந்த தியாகிகளின் பெயராவது… இன்றைய தலைமுறைக்கு தெரியுமா….?
சொந்த மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை மறைத்து விட்டு குமரி விடுதலை நாளை கொண்டாடுவதில் அரசுக்கு என்ன பெருமை இருக்க முடியும்.!*
குமரி மாவட்ட விடுதலைப் போராட்டத்தில் தனி நபருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து மற்ற தியாகிகளை எல்லாம் இருட்டடிப்பு செய்வதற்கு தமிழக அரசு துணை போகிறதா..?*
குமரி மாவட்டத்தின் விடுதலைக்காக திருவதாங்கூர் தமிழர் காங்கிரஸ்”‘என்ற இயக்கம் 1945 டிசம்பர்16 .. அன்று தொடங்க பட்டது முதல். மக்களை திரட்டி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து குமரியின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை மறைத்து விட்டு, மறந்து விட்டு குமரியின் விடுதலை நாளை எப்படி கொண்டாட முடியும்..?*
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி. தா. நா. கா.) உருவாக்கப்பட வேண்டும் தமிழர் நாட்டை, தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும்…. என்று குமரி மண்ணின் விடுதலைக்காக வீர முழக்கமிட்டு இயக்கத்திற்கு விதை போட்டவர்…
தியாகி. பி.எஸ்.மணி.*
தெற்கெல்லை போராட்டத்திற்காக தொடங்கப்பட்ட இயக்கம் திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ் (தி த நா கா) இயக்கத்தின் நிரந்தர தலைவராக.: சாம் நத்தானியல் நாடார் அவர்களும், இயக்கத்தின் பொதுச்செயலாளராக.: ஆர்.கே.ராம் அவர்களும். அமைப்புச் செயலாளராக.: பி.எஸ்.மணி அவர்களும். தொண்டர் படை தளபதியாக.: காந்திராமன் அவர்களும்.* செயலாளராக இறச்சகுளம் பி.ஜே.பொன்னையா சாம்பவர் அவர்களும், A.K செல்லையா சாம்பவர் மற்றும் A.சாமராஜ் சாம்பவர் ஆகியோரும் குமரி மாவட்டத்தின் விடுதலை போராட்டத்திற்காக 1945 டிசம்பர் 16-ஆம் நாள். குமரி மாவட்ட விடுதலைக்கான இயக்கம் தொடங்கப்பட்டு அந்த இயக்கம் குமரிக்கு விடுதலையும் பெற்று தந்தது….*
இந்த வரலாற்று சிறப்புமிக்க தியாகங்கள் யாருக்காக..? ஏன்.? எதற்காக மறைக்கப்படுகிறது.?
   உயிர் கொடுத்து வாங்கிய சுதந்திரத்திலும்" உள்நாட்டு அரசியலா..?         வாக்கு வங்கி அரசியலா..?இந்திய சுதந்திரத்திற்காகவும், குமரி மாவட்ட விடுதலைக்காகவும் போராடிய, உயிர் நீத்த, அத்தனை தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி வணங்குகிறது….
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)