• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

BySeenu

Dec 15, 2024

கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 70 மா.ந.க வீதியில் அமைந்து உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நடத்தும் கோவை மக்கள் சேவை மையம், தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் முகாமினை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறும்போது :-

மருத்துவ முகாம் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடத்தி வருகிறோம். குறிப்பாக மழை காலத்தில் உடல் நலம் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக எடுக்கப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குப்பை வண்டிகள் இல்லாதது, தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மிகவும் தாமதமாக குப்பைகள் எடுக்கப்பட உள்ளது. அதிகமான வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில் மக்கள் தரமான வாழ்வதற்கு கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கண்டனத்துக்குரியது.

சட்டப் பேரவை கூட்டத் தொடர் 2 நாட்கள் நடத்தியது ஏதோ பெயருக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தான் செயல்பட்டு உள்ளதாக தோன்றுகிறது. தமிழகம் மாதிரியான மிகப்பெரிய மாநிலத்தில் பல்வேறு துறைகளை கொண்ட மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலத்தில் பிரச்னைகளை பற்றி ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த சட்டமன்றத்தில் நாட்களை குறைத்தது மிக ஏமாற்றமாக உள்ளது.
4 – 5 சட்டமன்றம் கூடுகிறது என்பதால், 4 நிமிடங்கள் முடிக்க சொல்வதுடன், அனைவருக்கும் அந்த வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் மக்கள் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் 100 நாட்கள் சபை நடத்துவோம் ஒரு வருடத்திற்கு என கொடுத்த வாக்குறுதிகள் மற்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைகள், எதிர்ப்பை சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். தி.மு.க வை பொறுத்தவரை ஏதாவது பிரச்னை என மத்திய அரசை எதிர்க்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாக தங்களை நிலை நிறுத்தி கொள்ள முடியும் என்பது மட்டும் தான் தி.மு.க வின் நிலைபாடு. மோடி, மத்திய அரசை குறை சொல்வதற்கான அரசியல் வாய்ப்பை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு துறைகளில் மாநில அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்து உள்ளது.

மாநில அமைச்சர்கள் வரும் போது மக்களால் காட்டப்படும் கோவம் என்பது 5% தான். மீதம் எப்போது இந்த ஆய்வு தூக்கி எறிவோம் என காத்து வருகின்றனர். ஆனால் முதல்வர், அமைச்சர்கள் சிறிதும் பொருட்படுத்தாமல் உள்ளனர், இதற்கான பலனை 2026 ல் அனுபவிப்பார்கள்.

மக்களுடைய பிரச்சனையை காது கொடுத்து கேட்க கூட அரசு தயாராக இல்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய விஷயம்.

கல்வி பொதுப்பட்டியல் ரொம்ப நாளாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்வதன் வாயிலாக தான் இதை கொண்டு வர முடியும். பொது கருத்தை எட்டுவதற்கு மாநில கட்சிகள் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளலாம். கல்வி என்பது அடிப்படை, ஆரம்ப கல்வி முழுக்க, முழுக்க மாநில அரசு சார்ந்து உள்ளது. உயர் கல்வி என்பது பெரும்பாலான உதவிகள் மத்திய அரசு வழங்குகிறது, மத்திய அரசுக்கு ஒரு பங்கு உள்ளது. உயர் கல்வி துறையில் பெரும்பாலான உதவிகளை நாம் என்ன செய்ய போகிறோம், அதற்கான அணுகுமுறை என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். ஆரம்ப கல்வியில் , அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்புகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து உள்ளது. அடிப்படை வசதிகளை கூட சரி செய்ய முடியாத நேரத்தில், மாநில அரசு பொறுப்பில் பள்ளி கல்வித் துறையை சரியாக அணுக முடிவதில்லை. அதனால் ஆரோக்கியமாக இது தொடர்பாக தீவிர விவாதம் நடத்தப்பட வேன்டும்.

கல்வி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் தொடர்பான கேள்விக்கு..,

எம்.எல். ஏ., க்களுக்கு சிறப்பு நிதி கொடுக்கிறோம் என்ற அறிவிப்புக்கு, வழக்கமான அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து இதுதான் என கொடுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சாலைகள் எங்கும் சரியில்லை, அதற்கென்று கொடுக்கின்ற நிதி எங்கு செல்கிறது? நிதி ஒதுக்கீடு என்று சொன்னாலும் வேலைகள் எதுவும் நடப்பதில்லை.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்துமிடம் வேண்டும் என கேட்டதற்கு , சாத்தியமில்லை என்கின்றனர். வாகன பெருக்கம் அதிகரிக்கும் நிலையில் நவீன வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். ஆனால் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாத அரசிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

மாநில அரசின் நிதி பகிர்வு தொடர்பாக ஆணையத்தால் நடத்தப்பட்டது, அரசாங்க நடைமுறையாக பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகள் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. அடுத்த முறை புதிய கூட்டத்தின் போது இந்த கருத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிதி பகிர்வு தொடர்பான தீர்மானம் தொடர்பான கேள்விக்கு பதில் அவர்.

தி.மு.க அமைச்சர்கள், முதல்வர் எந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என தெரியவில்லை. ஊடகத்தில் அமைச்சர்களின் பதில்கள், நடைமுறையில் என்ன என்பதை சமூக வலைத் தளங்களில் இளைஞர்கள் பதிவிடுகின்றனர். ஒரு மகாராஜா மனப்பான்மையில் தான் அமைச்சர்கள் உள்ளனர்.

நீர் மேலாண்மையில் முன்னோர்கள் மிக அழகாக திட்டமிட்டு உருவாகி விட்டு சென்ற நிலையில், ஆளுங்கட்சி அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, குடியிருப்புகள் அனுமதிப்பது, உயர் நீதிமன்ற உத்தரவிட்ட இடங்களிலும் செய்யப்படுவதில்லை, மாற்று ஏற்பாடும் செய்வதில்லை. நீர் நிலை ஆக்கிரமிப்பு நீக்கப்படாததால் மழை காலங்களில் அதேகென்று அதிகமான கோடிகளை மக்கள் வரிப் பணத்தில் செலவிட வேண்டி உள்ளது.

அதானியை நான் சந்திக்கவில்லை என முதல்வர் சொல்கிறார் . இது மாப்பிள்ளையின் அரசாங்கம் என தி.மு.க கட்சியினர் சொல்கின்றனர். எங்கள் மாநில தலைவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள். வெற்றிப் பெற்றவர்கள்ளுக்கு சட்டப் பேரவையில் பதில் சொல்வதற்கு கூட மின்சாரத்துறை அமைச்சர் இல்லை என கூறினார்.