தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் சாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் சுகந்தவாசனை அறக்கட்டளை சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப்,
பேராயர் டேனியல் தேவனேசன், பேராயர் டாக்டர் ஜோசப், சாரதி நினைவு அறக்கட்டளை இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சமத்துவத்தின் முக்கியத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் அன்பு பகிர்வின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சமத்துவ பொங்கல் வைத்து,
ஜாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையின் அடையாளமாக அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், பள்ளி புத்தகப் பைகள் ஆகியவை வழங்கப்பட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன்,
திராவிடர் கழக மாவட்ட தலைவர் முத்தையன், தாம்பரம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நாகூர் கனி, சாரதி நினைவு அறக்கட்டளை உறுப்பினர் சுரேஷ்,
மேலும் சாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் சுகந்தவாசனை அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகிய மதிப்புகளை மக்களிடையே வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழா
தாம்பரத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.




