மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி வளர்ச்சி மையம், மதுரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், எக்விடாஸ் அறக்கட்டளை மற்றும் உசிலை நகர லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன். மதுரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயராமன், பி. கே. எம். அறக்கட்டளை நிர்வாகி புலவர் சின்னன் ஆகியோர் முன்னிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 45 மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்றன . இந்த முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும்
இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் 100 க்கு மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.
இதுபோன்று தனியார் அமைப்புகள் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதால் தங்கள் வாழ்க்கை தரம் முன்னேறுவதாக பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.









