சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

கொடிநாள் நிதி திரட்ட 2024-25ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.23,63,000 நிர்ணயிக்கப்பட்டது. அனைத்துத்துறை அலுவலர்களின் முழு ஒத்துழைப்போடும் ரூ.36,31,725 நிதி வசூல் செய்யப்பட்டது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் அதிக சதவீதம் நதி திரட்டியதில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.






