• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்…

BySeenu

Nov 18, 2023
கோவை கோபாலபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர்  மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொகிதீன்,

செயற்குழு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாலஸ்தீன் பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் நாடு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.இங்கிலாந்து,அமெரிக்காவில் யூதர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக பல கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அதனை ஒட்டி தான் 15 தீர்மானங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இஸ்ரேல் செய்தது தவறு என்று பிரதமர் கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்று இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் தனது இயல்பு ஏற்றவாறு செயல்படுகிறார்.
டெல்லியில் இருக்கக்கூடிய ஆட்கள் ஏவுவதால் ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றக்கூடியது அரசாங்க மசோதா சாதி மற்றும் மாதம் சார்ந்து எந்த விதமான மசாலாக்களையும் நிறைவேற்றவில்லை.தமிழக ஆளுநர் சர்வாதிகளாக நடந்து கொள்கிறார்.

NDA கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தற்போது இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறினார்.NIA வைத்து முஸ்லிம்கள் மீது தவறுதலாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு அமலாகத்துறை, வருமானவரி துறை வைத்து எதிர்க்கட்சிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.