கல்யாணம் நிச்சயம் ஆனதால் காதலனை வீட்டிற்கு அழைத்து விஷம் கொடுத்து கொன்ற காதலி.
கல்லூரிக்கு செல்லும் சமயங்களில் சாலையில் ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த காதல் கடைசியில் கொலையில் முடிந்தது.!? காதலி கிரீஷ்மா(22), காதலன் ஷாரோன்ராஜ்(23) உடன் திருவனந்தபுரம், திற்பரப்பு, கன்னியாகுமரி என சேர்த்து சுற்றியுள்ள காதலர்கள் தனிமையான இடத்திலும் பல நாட்கள் சந்தித்து காதலை வளர்த்த நிலையில்,
கிரீஷ்மாவின் வீட்டில் இவருக்கு ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் மணம் பேசி முடிவு செய்த நிலையில், கிரீஷ்மா தன் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவெடுத்ததை உணராத காதலன் ஷாரோன்ராஜ் காதலியிடம் மிகுந்த நேசம் காட்டி வந்துள்ளார்.
கடந்த 2022_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14_ம்தேதி திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இவரது பெற்றோர்கள் கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டு சிகிச்சை செய்த நிலையில் 11_நாட்களுக்குபின் சிகிச்சை பலன் கொடுக்காத நிலையில் ஷரோன்ராஜ் உயிரிழந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கேரள மாநிலம் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாறசாலை காவல் நிலையம் வழக்கு குறித்து மெத்தன நிலையில் இருந்ததால், இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
திருவனந்தபுரம் குற்ற பிரிவு காவல்துறை கிரீஷ்மா-விடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளியே வந்தது.

காவல்துறை விசாரணையில் கிரீஷ்மா சொன்ன தகவல்கள். நான் ஷரோன் ராஜ்யை காதலிப்பது என் பெற்றோர்களுக்கு தெரியாது. ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரோடு எனக்கு திருமணம் பேசி முடித்தனர். இந்த நிலையிலும் காதலுடன் நட்பாகவே இருந்தேன். என் நிலையில் எவ்வித மாற்றமும் தெரியாதபடி காதலுடன் முன் போலவே இருந்தேன். அவர் அழைக்கும் இடங்களுக்கு இரண்டு பேரும் சேர்ந்தே போனோம்.
என் காதலனை பெற்றோருக்கு அறிமுகம் செய்வதாக சொல்லி, என் வீட்டிற்கு ஷரோன் ராஜ்யை வர வைத்தேன்.
கசாயத்தில் விஷத்தை கலந்த நான் காதலனிடம், இந்த கசாயம் உடலுக்கு நல்லது என சொல்லி குடிக்க கொடுத்தேன். இது உடனடியாக கொல்லும் விசம் அல்ல கொஞ்சம், கொஞ்சமாக நாட்கள் கடக்கும் நிலையினை விஷம். கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டேன் என காவல்துறை விசாரணையில் தெரிவித்த கிரீஷ்மா அதற்கு முன் காதலனுக்கு குளிர் பானத்தில் பல்வேறு மாத்திரைகளை கொடுத்து அது பலன் தராத நிலையில், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தை தெரிவித்தவர். எனது முயற்சிக்கு அம்மா சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல் குமாரும் உதவியதாக தெரிவித்தார்.
கிரீஷ்மா காதலனை கொலை செய்ய உதவியாக இருந்த தாய், மாமாவையும் காவல்துறை கைது செய்தது. மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை 2023_ம் ஆண்டு ஜனவரி 25_ந் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குமரியிலும், கேரளாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று (ஜனவரி_17)யில் நெய்யாற்றன்கரை கூடுதல் செசன்ஸ் நீதிபதி எம்.எம்.பஷீர் காதலி கிரீஷ் மாவை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

கிரீஷ்மாவிற்கு இந்த கொலை முயற்சியில் இடத்தையாக இருந்த தாய், மாமா நிர்மல் குமாரும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி தாய் சிந்து மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் தாய் சிந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 95_ சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவி கிரீஷ்மா, மாமா நிர்மல் குமார் சம்பந்தப்பட்ட தண்டனை விவரத்தை இன்று (ஜனவரி_18) நீதிபதி அறிவிக்கிறார்.