• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெள்ளப் பெருக்கில் சிக்கிய கொண்ட இளைஞரை கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்..,

ByKalamegam Viswanathan

Oct 23, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில் இந்த பகுதியில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது தற்போது தண்ணீர் வருவதை அடுத்து விடுமுறை தினமான இன்று இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளித்துக் கொண்டு இளைஞர் அந்த கரையில் இருந்து இந்த கரைக்கு வர முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கயிறு கட்டி இளைஞரை பத்திரமாக மீட்டனர்.