எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு எழுச்சிபயணத்தின்போது
2 லட்சம் மக்கள் பங்கேற்று வரவேற்பு அளிப்பார்கள்.
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார். சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு. பொறுத்தார் பூமிஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் எடப்பாடியார் உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, திருமங்கலம் தொகுதி சேர்ந்த திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார் மற்றும் இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட அணி நிர்வாகிகள் காசிமாயன், சரவணபாண்டி, முன்னாள்யூனியன் சேர்மன் லதா ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மேற்கொண்டு வருகிறார் நான்காம் கட்டமாக அம்மா கோவிலில் எழுச்சி பயணம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரையூர் திருமங்கலம் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று ஒவ்வொருவரும் திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து இளைஞர்களையும் திரளாக பங்கேற்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் இதில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் ராமசாமி எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கபிகாசி மாயன் தகவல் தொழில்நுட்ப பிரிவு விவேக் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் பிரபு சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

இதற்கிடையே சாப்டூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா திருக்கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பொன்னாடை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது
மக்களை காப்போம், தமிழகத்தின் மீட்போம் என்ற எடப்பாடியாரின் எழுச்சி பயணம் கடந்த 7.7.2025 திங்கட்கிழமை அன்று கோவையில் இருந்து தொடங்கி 34 நாட்களில், 100 தொகுதிகளில் 10,000 கிலோமீட்டர் பச்சை பேருந்தில்,பச்சை தமிழர் எடப்பாடியார் 52 லட்சம் மக்களை சந்தித்தார், மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தமிழக மக்களின் இந்த பேராதரவை கண்டு அதிர்ச்சியில் .உறைந்து போய் கொண்டிருக்கிறது ஸ்டாலின் திமுக அரசு.
ஆளுங்கட்சியின் அதிகார தோரணையில் இந்த எழுச்சி பயணத்திற்கு பல்வேறு தடை கற்களை ஏற்படுத்துகிறார்கள், அந்த தடை கற்களை எல்லாம் தூள், தூளாக்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வெற்றி சரித்திரம் படைத்திருக்கிறார் எடப்பாடியார். எடப்பாடியாரின் எழுச்சி பயணம் மக்களின் பேரதரவுடன் 234 தொகுதிகளில் வெற்றி சரித்திரம் படைக்கும்.
ஆளும் திமுக அரசு மக்களுக்கு அறிவித்த திட்டங்கள் எல்லாம் பட்டை நாமம் போட்டதை எல்லாம் இன்றைக்கு தோலூருத்தி காட்டி மக்களிடம் எடப்பாடியார் வெளிச்சம் போட்டு போட்டு வருவதை கண்டு ஆளும் அரசு நடுங்கி போய் உள்ளார்கள்.
அரசியலில் காழ்புணர்ச்சி இருக்கலாம் ஆனால் அரசியலே காழ்புணர்ச்சி இருந்தால் தமிழ்நாட்டுக்கே சாபகேடாகும்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சிறுபிள்ளைத்தனமாக செய்ய ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தினால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்
பொறுமைக்கும் எல்லை உண்டு, சாதுமிரண்டால் காடு கொள்ளாது, பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் எடப்பாடியார் உள்ளார். நான்காம் கட்டமாக எழுச்சி பயணத்தின் மூலம் மதுரை மாவட்டத்திற்கு எடப்பாடியார் வருகை தருகிறார்.
குறிப்பாக மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் எடப்பாடியார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது எழுச்சிமிகு வரவேற்பை அளிக்க வேண்டும் .குறிப்பாக திருமங்கலம் தொகுதியில் 2 லட்சத்து, 45 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார்கள் .
கழகத் தொண்டர்கள் அனைவரும் அனைத்து வாக்காளரை நேரில் சந்தித்து திருமங்கலம் தொகுதியில் எடப்பாடியார் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் பொழுது ஏறத்தாழ 2 லட்சம் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர் என்ற வரலாற்றை நீங்கள் அனைவரும் உருவாக்கி தர வேண்டும் என பேசினார். தொடர்ந்து இளைஞர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது அரசுப் பள்ளியில் படிக்கிற பிள்ளைகள் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் ஏழு புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்த சமூக நீதிக் காவலர் எடப்பாடி யார் அவர்கள் நம்மளுடைய உணர்வுகளை புரிந்து கொள்கிற முதலமைச்சர் எண்ணங்களை பிரதிபலிக்கிற முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிற பொக்கிஷம் அவருடைய கரத்தை வலுப்படுத்த செய்ய வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.