• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’முதல் பார்வை வெளியானது

தமிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றன.தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ஜோயல் விஜய் இயக்குகிறார்.இந்தப் படத்தை M.கணேஷ் மற்றும் கண்ணன்.P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.முதல்பார்வையில்நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி ‘கூடு’ என்ற தலைப்பு மட்டும் வித்தியாசமாக இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.