• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

ByMuthukumar B

Feb 25, 2025
பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் என்ற கிராமத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கும் சதீஷ் (32 வயது) என்பவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சதீஸ் குடும்பத்தார்  சதீஸை வீட்டை விட்டு வெளியே விடாமல் பாதுகாத்து வந்தனர், ஆனால் சதீஸ்  அவ்வபோது வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் மரங்கள் வீட்டின் மேல் ஏறி கொள்வார். இந்நிலையில் சதீஸ் தனது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஏறி கண்களை கட்டி கொண்டு தான் கீழே குதிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கிராம மக்கள் கோட்டுர் காவல்நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீர் தொட்டி மேல் ஏறி சதீஸை கயிறு கட்டி கீழே இறக்கி மீட்டனர. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பக பேசப்படுகிறது.