• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு அபிராமிஅம்மன் திருவிழா..,

ByVasanth Siddharthan

Apr 29, 2025

திண்டுக்கல் நகர் மத்தியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 400 வருடங்களுக்கு மேல் பழமையான மிகவும் பிரசிதிப்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி இன்று 29.04.25 கோவில் திருவிழா 13 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் ரிஷப ஹோமம், ஹெரி ஹோமம், உட்பட பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டது.

இதனையடுத்து கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட 16 வகையான அபிஷகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நந்தி பகவான் மற்றும் வேல் பொறித்த கொடியினை மேலதாலங்கள் வாத்தியங்கள் முழங்க பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.

இன்று தொடங்கிய சித்திரை திருவிழாவானது தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் நந்திகேஸ்வரர் வாகனம், கற்பக விருச்சக வாகனம், பூத வாகனம், யானை வாகனம், யாழி வாகனம், ரிஷப வாகனம், கைலாய வாகனம், குதிரை வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் எழுந்தருளி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகிய 4 ரத வீதிகளில் உலா வந்து வழி நெடுகிலும் பக்தர்களுக்கு நாள்தோறும் அருள்பாலிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து 10ம் நாளான அடுத்த மாதம் 5ம் தேதி திருக்கல்யாணவைபவம் , அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி திருத்தேரோட்டமும் பத்தாம் தேதி தீர்த்த வாரியம் நடைபெற உள்ளது.

இன்று 29.04.25 நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் அருள் பெற்றுச் சென்றனர்.

அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி உறுப்பினர்கள் வீரக்குமார் சண்முகவேல் மலைச்சாமி மலைச்சாமி அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் நிர்மலா செயல் அலுவலர் தங்கலதா மற்றும் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி திண்டுக்கல் சீனிவாச பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.