நாகப்பட்டினம் மாவட்டம் ‘பேரன்பின் பெருவிழா’ எனும் முழக்கத்தோடு திருப்பூண்டியில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் எஸ் எம் சார்லி அவர்களோடு இன்று கலந்து கொண்டனர்.

பல்வேறு முஸ்லிம் ஜமாத்துகளின் தலைவர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர்கள் ஜமாத்துகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்த நோன்பு திறக்கும் ரமலான் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.