• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செல்போனில் கேம் விளையாடிய மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை

டெல்லி நீப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மகன் உத்கர்ஷ்(5). இவர் நேற்று மாலை செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வேலைகளை முடித்து விட்டு ஆதித்யா வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்நேரம் மகன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், வீட்டிலிருந்த விறகு கட்டையை எடுத்து மகனை தாக்கியுள்ளார். மேலும் சிறுவனின் கழுத்தை நெரித்ததில், உத்கர்ஷ் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மகனைக் கொலை செய்த தந்தை ஆதித்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.