• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் திட்ட நோட்டிசை வைத்த நக்கலடித்த எடப்பாடி..,

ByR. Vijay

Jul 19, 2025

மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மேற்க்கொண்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பரப்புரை செய்து  வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கீழ்வேளூர் வடக்கு வீதியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்

மக்களிடம் ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின்ட்டு வராரு. 45 நாளில் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்கிற ஸ்டாலின் 4 வருசமா என்ன செய்தார் என கேள்வி எழுப்பியவர், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக  இருக்கும் போது வைத்த பொது மக்களின் மனுக்களை பெற்ற  பெட்டியின் சாவியை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு உள்ளார் என்று திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நோட்டிசை கையில் வைத்தபடி நக்கலடித்தார்.

அப்போது எடப்பாடியிடம் துண்டு சீட்டை கொடுத்து கீழ்வேளூர் தொகுதி தொடர்ந்து கூட்டணி கட்சிக்கே கொடுக்குறிங்க இந்த முறை அதிமுகவே நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இந்த முறை கீழ்வேளூர் தொகுதியில் அதிமுகதான் நிற்கும்  என்று  எடப்பாடி கூறியதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.