

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட
இவ்விழாவினில் ..
தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது..
எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோம். தொடர்ந்து நாங்கள் இணைந்து நல்ல படைப்புகள் தருவோம், எங்களை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வாழ்த்திப் பேசியதாவது..
எனக்குத் துரை எப்பவும் பிடித்த இயக்குநர். ஒரு ஃப்ரேம் கூட மிஸ் பண்ண முடியாத அளவில் தலைநகரத்தை இயக்கியுள்ளார். தொட்டி ஜெயா படத்தில் வில்லன் இடத்திற்கே சென்று நாயகன் மோதுவான் அந்த மாதிரி காட்சியைத் திரையில் உருவாக்கிய முதல் இயக்குநர் அவர் தான். அவரது கதைகள் என்றுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் நல்ல மனதுக்காரராக இருக்கிறார். சுந்தர் சியை திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது..
மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு இந்த விழாவிற்கு வந்தேன், இயக்குநர் துரை அண்ணன் எனக்கு குரு, அவருடைய நல்ல பழக்கத்தை நான் பின்பற்றி வருகிறேன், சுந்தர் சி சார் உழைப்பு சாதாரணம் இல்லை, 27 வருடம் இந்த துறையில் இருக்கிறார், தலை நகரம் முதல் பாகத்தை விட இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் பிரபாகருக்கு வாழ்த்துகள் கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு வெற்றியாகத் தான் இருக்கும் என்றார்
இயக்குநர் சசி பேசியதாவது..
நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரெய்லரில் ஆக்சன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும் எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்ய மாட்டார் அதனால் தான் 20 வருடங்களுக்கு மேலாகத் சினிமாவில் இருக்கிறார். சுந்தர் சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர் இருவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள் கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்

நடிகர் பரத் பேசியதாவது…
என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குநர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். நேபாளி படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி. அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால் தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குநராக வலம் வருகிறார். சுந்தர் சி சாரின் படத்தில் நடிக்க ஆசை, இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே உங்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சி சார் அட்டகாசமாக இந்தக்கதையில் பொருந்திப் போகிறார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
இயக்குநர் துரை மிக எமோஷலான மனிதர், எப்போதும் உரிமையோடு பேசுவார். பழனி படத்திற்குப் பிறகு நேபாளியில் பரத்தை வைத்து மிரட்டியிருந்தார். அப்போது தான் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என உணர்ந்தேன். துரை எப்போதும் சினிமாவை மட்டுமே நேசிப்பவர். அவர் வெற்றிபெற வேண்டும். சுந்தர் சி இத்தனை காலம் சினிமாவில் தாக்குப்பிடிக்கக் காரணம் அவரின் திட்டமிடல் அபாரமானது, இந்தக்கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.

நடிகர் சுந்தர் சி பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2 ஆம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன் ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் இருட்டு படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர்.அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன் என்றார்

இயக்குநர் V Z துரை பேசியதாவது…
நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி, அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் என் தம்பி பிரபாகர் தயாரிப்பாளர், என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி, ஒளிப்பதிவாளர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள் , சுந்தர் சி சார் தான் எனக்கு ஆசிரியர், பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன், அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். இயக்குநர் சசி சாருக்கு நன்றி. நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை, இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக உள்ளது அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
- காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்…மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் … Read more
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் காலாண்டு தேர்வு … Read more
- அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஊழியர்கள் போராட்டம்…பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு … Read more
- காரியாபட்டியில் பஸ் நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது…விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் மதிப்பீட்டில் … Read more
- மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..!மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி … Read more
- பாஜக.வை விமர்சிக்க வேண்டாம்… அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக.வை விலக்கி உள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக … Read more
- திடீர் உடல்நிலைக்குறைவால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி..!
- ஊராட்சி வரி செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்..!ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு. க. … Read more
- பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை. – எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.இது … Read more
- தமிழகத்தில் இன்று முதல் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்..!கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 63,000 … Read more
- தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பும் அமலாக்கத்துறை..!தமிழகத்தில் மீண்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழகத்தில், சென்னை, … Read more
- தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை … Read more
- சித்தா திரை விமர்சனம்!!S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா” இத்திரைப்படத்தில் … Read more
- தமிழகத்தில் டெங்கு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…கடந்த காலங்களை விட டெங்கு தமிழகத்தில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும். … Read more
- மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை – கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் … Read more