திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி(58) ஆண்டு தோறும் கந்த சஷ்டி முதல் நாளில் பழநி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே 6 நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க ரத புறப்பாட்டின் போது பங்கேற்கும் சூரசம்ஹாரம் நாளன்று மலையிலிருந்து யானை பாதை வழியாக கீழே இறங்கி கிரி விதியில் சூரசம்ஹாரத்தில் பங்கேற்கும். அதன் பின் வெற்றி விழாவில் பங்கேற்க பெரியநாயகி அம்மன் கோயில் அருகே யானை தங்கும் இடத்திற்கு வந்து சேரும்.

இந்தாண்டு மழை பெய்து வருவதாலும், யானை வயது அதிகரித்த காரணத்தினாலும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மலை முருகன் கோயிலுக்கு யானை செல்லவில்லை. கிரி வீதியில் நடக்கும் சூரசம்ஹாரத்தில் கோயில் யானை பங்கேற்கும். எனவும். கோவில் நிர்வாகம் சார்பில். தெரிவிக்கப்பட்டுள்ளது.