• Sat. May 11th, 2024

கோவை புரோஜான் மாலில் கண்ணைக்கவரும் ஈபிள் டவர்..!

BySeenu

Dec 22, 2023
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோஜோன் மால் வர்த்தக வளாகத்தில், கண்ணை கவரும் வகையில் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான  “ஈபிள் டவர்” அமைக்கப்பட்டுள்ளது....
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது முதலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை  புரோஜோன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் மரங்களும், அலங்கார தோரணங்களுடன் முகப்பு வாயிலும் அமைக்மப்பட்டுள்ளது. இதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சுமார் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஈபிள் டவர் நிறுவப்பட்டுள்ளது வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோபுரம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. 
வருகிற 31ஆம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளதுடன், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60 சதவீதம் வரை  தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளதாகவும், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும், புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பாடியா மற்றும் விற்பனை பிரிவு  தலைவர் பிரிங்ஸ்டன் நாதன் ஆவியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *