• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது…

Byஜெ.துரை

Aug 11, 2024

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’

ஃபியூச்சரிஸ்டிக் ஆக்‌ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம், அதன் எடிட்டிங் கட்டத்தை முடித்து, தற்போது டப்பிங் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இப் படக்குழுவினரின் அர்ப்பணிப்பால் படத்தின் போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் சுமூகமாக நடந்து வருகிறது.

படத்தின் எடிட்டரான அரவிந்த், பார்வையாளர்களைக் கவரும் வகையில், தடையற்ற மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளை உன்னிப்பாக வடிவமைத்துள்ளார்.
கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்க, படத்தின் மற்ற முக்கியகதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான்விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபிகண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் தேவ சூர்யாவின் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சந்தோஷ் ராமின் தூள்ளலான இசையில், விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் பிரபாகரன் அவர்கள் மேற்பார்வையில், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அளவுகோலை அமைக்க “ரெட் ஃப்ளவர்” திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது.

மேலும் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ அவர்கள் அதிரடியாக காட்சி அமைத்துள்ளார். அவரது புதுமையான மற்றும் துணிச்சலான ஸ்டண்ட் காட்சிகள் படத்தின் ஆற்றலுக்கு கணிசமாக பங்களித்திருக்கிறது.

இது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்…….

படத்தொகுப்பு பணியை முடித்துவிட்டு டப்பிங்கில் கவனம் செலுத்தி வருகிறோம். ‘ரெட் ஃப்ளவர்’ படத்தை பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடின உழைப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உயர் ரக-ஆக்ஷன் காட்சிகள் கலந்து, தமிழ் சினிமாவின் கேம்-சேஞ்சராக ‘ரெட் ஃப்ளவர்’ தயாராகி வருகிறது என்றார்.