• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்

ByJeisriRam

Nov 30, 2024

அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.

தேனி மாவட்டத்தில் அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டதால் உடனடியாக வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.

தேனியில் இருந்து குச்சனூர் நோக்கி அரசு பேருந்து TN57N 1259 சென்றது. அப்போது போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் சென்ற கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென மயக்கி விழுந்தார்.

உடனடியாக கணவர் சத்தம் போட்டதால் பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது. 108 வாகனத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு காலதாமதம் ஏற்பட்டது.

உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அருகே உள்ள வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் தற்போது நலமுடன் உள்ளார்.

அரசு பேருந்து ஒட்டுநர் முருகன் மற்றும் நடந்துநர் செல்வகுமாருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.