சிவகங்கையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேமுதிக மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதல்வர் பதவி விலக கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு எப்படி அடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கண்டனம் முழக்கமிட்டனர் ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து பதாகைகள் ஏந்தி தமிழக முதல்வருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் மைசூர் ரகுமான், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஞானமுத்து, மாயழகு செல்லக்கண்ணு, மானாமதுரை ஒன்றிய செயலாளர் தர்ம ராமு,கழக மகளிர் அணி துணை செயலாளர் அங்கயர் கன்னி, சிவகங்கை நகரச் செயலாளர் தர்மராஜ், நகர அவைத் தலைவர் மாரி, சிவகங்கை ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், முத்துசாமி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் தெட்சணாமூர்த்தி, திருப்புவனம் ஒன்றிய செயலாளர் காந்தி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் மானாமதுரை மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் மகளிர் அணி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
