• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஒட்டு மொத்த கஜானாவை காலி செய்த திமுக அரசு- கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 13, 2026

கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்த சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் திமுக அரசிற்கும் தமிழக முதல்வருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி,

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்ற வருகிறது

அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 100 நாள் முறையாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வாரந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது

தற்போது திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு மாதம் கூட வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில் பாஜகவும் அதிமுகவும் இத்திட்டத்தை முடக்க பார்ப்பதாக திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது

ஆட்சியில் இல்லாத அதிமுகவை எதிர்த்து வெட்கமே இல்லாமல் திமுக தங்களது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள்

மக்களை ஏமாற்ற திமுக அரசு சதி செய்கிறது

ஆட்சிக்கு வந்தால் 100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வாரம் ஒரு முறை அவர்களது வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்று எரிச்சலில் முக ஸ்டாலின் எங்கள் மீது புழுதி வாரி தூற்றுகிறார்

ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கும் மு.க.ஸ்டாலின் தற்போது ஆட்சியில் உள்ள போதே வழங்க வேண்டியதுதானே, இனிமேல் ஆட்சிக்கு வந்து வழங்குவதாக சொல்வது கதை அளக்கும் வேலை*

5 லட்சம் கோடி உலக வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்கு எந்த திட்டமும் செய்யவில்லை

ஐந்து ஆண்டுகள் முடியும் முன்னரே 5 லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டு என்ன செய்தார்கள் என்பதுதான் தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது

மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க துடிக்கும் திமுகவுக்கு இந்த தேர்தல் சரியான சம்பட்டி அடி கொடுக்கும் தேர்தலாக அமையும்

கோடைகாலத் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜேந்திரபாலாஜி,

தமிழகத்தின் ஒட்டுமொத்த கஜானாவையும் காலி செய்து தமிழக மக்களுக்கு எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் திமுகவுக்கு தமிழக மக்கள் பட்டை நாமம்தான் கொடுப்பார்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இல்லாத திட்டங்களை முதல்வர் அறிவித்து வருகிறார்கள்.

முதல்வர் அறிவிக்கும் திட்டங்கள், அவர் தொடக்கி வைக்கும் திட்டங்கள் அத்தனைக்கும் எந்தவிதமான நிதி ஆரமும் கிடையாது. நிதி ஆதாரமே இல்லாமல் திட்டங்களை அறிவிக்கிறார்.

கஜானாவில் பணம் இல்லாமல் திட்டங்களை அறிவிக்கிறார் தமிழக மக்கள் ஏமாற்றுவதற்கு தமிழக திமுக அறிவிக்கும் நிதியாதாரமே இல்லாமல் திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தமிழக மக்களை ஏமாற்ற மு க ஸ்டாலின் தயாராகிவிட்டார், அவரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

திமுக வீட்டுக்கு போகிறது, அதிமுக கோட்டைக்கு போகிறது.