தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான 17வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் ஒரத்தநாடு வட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த பள்ளி மாணவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நல்ல முகமது, உடற்கல்வி ஆசிரியர் ராஜகோபால், மற்றும் அனைத்து ஆசிரியர்கள் மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி உயர்கல்வி கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த விளையாட்டு துறை ஆசிரியர்களுக்கும் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர் .

மேலும் வெற்றி அடைந்து ஊர் திரும்பிய மாணவர்களுக்கு ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவர் சேகர், ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், டிஎஸ்பி கார்த்திகேயன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமி பாலன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.





