திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பமணியசாமி திருக்கோயிலில் டிவிஎஸ் இண்டஸ்ட்ரிஸ் உரிமையாளர் வேணு சீனிவாசன் தனது வேண்டுதல் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரக்கல் பதிக்கப்பட்ட தங்க வேலை காணிக்கையாக சுவாமிக்கு வழங்கினார்.

அதனை திருக்கோயில் ஸ்தானிக பட்டர் ராஜா வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்கவேலுக்கு புனித நீர் தெளித்து சிறப்பு அர்ச்சனை செய்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு கைகளில் சாத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது .

அதன் பின்பு கோயில் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது அதனை மத்தியஸ்த கடைக்கு அனுப்பப்பட்டு துல்லியமாக எடை போட்ட பின்பு இதனுடைய மதிப்பு தெரிய வரும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும்திருப்பரங்குன்றம் முருகனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேல் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.