இந்த காலத்து இளைஞர்களிடம் சாதி பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது.
நாமும் நமது முன்னோர்களும் ஜாதியை ஒழிக்க எவ்வளவு போராடுகிறோம். அதிலும் குறிப்பாக முத்துராமலிங்க தேவர் சாதி எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாக போய்விடும் என கூறியிருந்தார்.

ஜாதியை பாகுபாடு பார்ப்பவர்கள் சாமி கும்பிடுவதற்கு அருகதை அற்றவர்கள் உண்ணும் கை உயர்ந்தது உழைக்கும் கை தாழ்ந்தது என எண்ணும் எண்ணம் இருக்கக்கூடாது. இறைவனுக்கு முன் இரு கரம் கூப்பி தான் வழிபடுகிறோம் அப்படித்தான் அனைவருக்கும் எண்ணமும் இருக்க வேண்டும் என கூறுகிறார்…
ஒரு இடத்தில் நடந்தால் அது விபத்து என எடுத்துக் கொள்ளலாம் ஒவ்வொரு இடத்திலும் நடக்கிறது. இதை எப்படி எடுத்து கொள்வது சட்டம் இருக்கிறது. அது ஒழுங்காக இருக்கிறதா ஆணவ படுகொலைகளுக்கான ஆரம்பத்தை கண்டறிந்து அதை வேரோடு அறுக்க வில்லை என்றால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்…
என்னுடைய ஜாதி உயர்ந்த ஜாதி என நினைக்கும் எண்ணம் கொண்டவர்களை கட்டுப்படுத்த அதற்கான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் கல்வியிலிருந்து வரவேண்டும் உள்ளத்தில் இருந்து ஜாதி ஒழிப்பு வரவேண்டும் காமராஜர் சீருடை அளித்தது ஏழை பணக்காரன் ஜாதி வேறுபாடு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது ஜாதி வாரியாக தனித்தனியாக உட்கார வைக்கும் நடைமுறை இருந்தது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நீதி விடுதி என பெயர் வைக்கப்படுகிறது எங்களுக்கும் கல்லுக்கும் மண்ணுக்கும் பெயர் வைத்தால் போதுமா ஜாதி ரீதியாக அனைவரும் ஒன்றாக பார்க்க வேண்டிய இடத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் தனியாக விடுதி ஏன் அமைக்கப்படுகிறது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலையில் தனி விடுதி அமைக்க வேண்டிய கட்டாயம் என்ன 60 வருடங்களாக என்ன சாதித்தீர்கள்.
ஜாதி மதம் மட்டும் தான் அரசியல் செய்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அப்படித்தான் உள்ளது. அமைச்சர் அமித் ஷா மதுரையில் வந்து பேசும்போது இந்து மக்களின் ஒற்றுமை என பேசியுள்ளார். இந்திய மக்களின் ஒற்றுமை என்று தானே பேசி இருக்க வேண்டும்.
பாஜக ஒரு மதவாத கட்சி ஜாதி அடிப்படையில் இயங்கும் கட்சிகளை ஒரு மத அடிப்படையில் இயங்கும் கட்சி வைத்துக்கொண்டு உன் ஜாதிக்கு எத்தனை சீட்டு என் சாதித்து இவ்வளவு சீட்டு என ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள்

சம பங்கு என கூறுவதே தவறான கருத்து உரிய பங்கு என கூற வேண்டும் மாடியில் இருப்பவனுக்கும் குடிசையில் இருப்பவனுக்கும் சம பங்கு என்றால் எப்படி?
பல நூறு ஆண்டுகளாக கல்வி கற்று வரும் சமுதாயத்திற்கும் இப்பொழுது தான் கல்வி கற்க துவங்கியிருக்கும் எங்களுக்கும் எப்படி சமமான பங்கு சரியாக இருக்கும்.
அடிப்படையாக மாற்றம் வேண்டும் இந்த அரசியலுக்குள் இந்த அமைப்பிற்குள் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது சிஸ்டம் சரியில்லை என அரசியலுக்கு வந்த சில அரசியல்வாதிகளை போல் அடிப்படையை மாற்ற வேண்டும் என்பதுதான் தேவையாக உள்ளது. நிலையில்லா மாற்றி அமைக்கும் ஒரு காலம் வரும் அப்பொழுது இது போன்ற ஜாதிய கொலைகள் நடந்தால் என்னை அழைத்து கேளுங்கள்.
ஜெயலலிதா சென்னை கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தின் பொழுது இனி பாஜகவில் கூட்டணி வைக்க மாட்டேன் என முடிவு எடுத்தார் இது வரலாற்றில் மிக சரியான முடிவு அதன் பிறகு 1999 இல் ஐயா கருணாநிதி எடுத்த முடிவு மிக தவறான முடிவு.
இப்போது அதிமுக எடுத்திருக்கும் முடிவு மிக மிக தவறான முடிவு.
கல்விக்கூடங்களில் ஜாதி இருப்பதால் ஜாதி ஒழியுமா என பல பேர் கேள்வி கேட்கிறார்கள் அப்படி இல்லை கல்விக்கூடங்களில் மட்டுமல்ல சமுதாயத்தில் ஜாதி உள்ளது அது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். ஜாதி அடிப்படையில் தான் அது வழங்கப்பட வேண்டும் எதன் பொறுத்து நான் நிராகரிக்கப்பட்டேனோ அதன் பொருட்டு எனக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்.
குடிவாரியான கணக்கீடு நடத்தப்பட வேண்டும் ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்டான பங்கு வழங்கப்பட வேண்டும். 100 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தேவையான பங்கீடு வழங்கப்பட வேண்டும்.
நத்தைக்கு கூடு ஏழுக்கு கொடுக்க போல தான் எனக்கு ஜாதி தேவைப்படுகிறது எனக்கு உண்டானதை நீங்கள் கொடுத்து விட்டால் சகோதரத்துவம் தானாக வந்துவிடும்..
ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி எடுத்து கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும்.
என ஆவேசமாக பேசிய சீமான் ஜாதி பற்றிய பேச்சிலிருந்து அப்படியே இந்த விமான நிலையத்தில் பறப்பதற்கு விமானம் இல்லை ஆனால் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏன் புதிய விமான நிலையம் தேவைப்படுகிறது. நாங்கள் இங்கு அந்த வசதி இல்லை இந்த வசதி இல்லை என கோரிக்கை விடுத்தோமா என விமான நிலையத்தின் பிரச்சினையைப் பற்றி பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.