• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கூலித்தொழிலாளி சாவில் மர்மம்
இருப்பதாக கூறி சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் அய்யனன் (21). இவர் கடந்த 1.11.2022-ம் தேதி காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அய்யனார் இறந்த இடம், அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் என்றும், இந்த தோட்டத்தில் அனுமதி இல்லாமல் மின்சாரத்தை எடுத்து ஆற்று நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
எனவே அய்யனன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் இன்று காலை குன்னூர் அருகே மதுரை, -தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக பஸ் மறியல் செய்தனர். டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இருப்பினும், வைகை அணை பொதுப்பணித் துறையினர் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த பஸ் மறியலில் 500க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.