• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

லதா மங்கேஷ்கர் மரணம் இந்த உலகிற்கு இழப்பு – இளையராஜா

பிரபல பின்ணணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால், மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இசையமைப்பாளர் இளையராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீக, காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்திற்கு மட்டும் அல்ல இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.