மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்த திருத்தலத்தில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக எழுமலை ராஜகணபதி, முத்தாலம்மன் கோவில் முன்பு வந்தார்., அங்கு பல்வேறு வேடங்களில் எதிர்த்து வந்த சூரனை போரிட்டு வென்றார்.,
வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்த சூரசம்ஹார நிகழ்வை எழுமலை மற்றும் எழுமலையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அரோகரா கோசத்துடன் பக்தி பரவசத்துடன் சூரனை வதம் செய்த நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.,

தொடர்ந்து நாளை அதிகாலை திருக்கல்யாண வைபோகம் வெகுவிமர்சையாக நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.,













; ?>)
; ?>)
; ?>)