• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா..,

ByV. Ramachandran

Aug 9, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.

இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா பதினோராம் திருநாளான நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு கும்ப அபிஷேகமும், காலை 9:30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமும், மதியம் 1 மணிக்கு தங்கச் சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6. O8 மணிக்கு சுவாமி ஆடித்தவசு கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து 6.21 மணிக்கு தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றுதல், பட்டு சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.47 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். அப்போது விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, மிளகாய் ஆகியவற்றில் ஆகியவற்றை சப்பரத்தில் வீசினர். மேலும் சங்கரா நாராயணா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.

ஆடித்தவசு விழாவில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ஷாம் கிங்ஸ்டன், துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜு, கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேஷ் , முதல்வர் பழனி செல்வம், தொழிலதிபர்கள் கனகவேல், சுப்பிரமணியன், சேர்மத்துரை, திவ்யா எம். ரெங்கன், ராமகிருஷ்ணன், சங்கரசுப்பு, சங்கரன், ராஜேஷ் மாரிச்செல்வம், சுந்தர், சி.எஸ்.எம். எஸ். சங்கரசுப்பிரமணியன், மாரிமுத்து, குமரன், கண்ணன், சுப்பையா ரமேஷ், உத்தண்ட ராமன், மணிகண்டன், துரைப்பாண்டியன் மற்றும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்பட்டிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.