• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும்

ByA.Tamilselvan

Dec 16, 2022

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும் என அந்த படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் இயக்குனர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.இந்த நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் குறித்து ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் கூறியபோது இந்த படத்தில் இன்டர்வெல் காட்சி, கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை இதுவரை இல்லாத அளவில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும், குறிப்பாக இன்டர்வல் சண்டைக்காட்சி தளபதி விஜய்யின் ஸ்டைலில் அவரது ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி செம மாஸ்-ஆக இருக்கும் என்றும் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்றும் அதுமட்டுமின்றி கிளைமாக்சில் மாஸ் என்பது மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளும் கலந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த தகவலை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.