• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வண்ண ஓவியங்களை தீட்டி அசத்திய குழந்தைகள்..,

BySeenu

Jul 28, 2025

கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் நிறுவனம்,எஸ்.ஐ.பி.அகாடமி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி மகால் அரங்கில் நடைபெற்றது.

குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் தேசிய தலைவர் நம்ரிதா முகர்ஜி
தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், தமிழ்நாடு தலைமை நிர்வாகி மங்கள் சாமி, மேற்கு மண்டல தலைமை நிர்வாகி சபரீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் முதல்வர் சுஜா டி.நாயர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவ,மாணவிகளின் ஓவிய திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு,நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி குழந்தைகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இதில், தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக தீட்டி வியக்க வைத்தனர்.

இறுதியாக சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு,பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நேஷனல் மாடல் பள்ளியின் துணை முதல்வர் லாவண்யா கலந்து கொண்டு,குழந்தைகள். மாணவ, மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.