• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மக்களை ஒன் டூ ஒன் சந்திக்க வேண்டும்..,

ByPrabhu Sekar

Jun 28, 2025

சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறேன். வருகிற 1-ம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வு நடக்கிறது. அதற்காக அழைக்கப்படுகிறேன் என நினைக்கிறேன்.

மக்களை சந்திக்காமல் ஏன் தி.மு.க. நிர்வாகிகளை மட்டும் சந்திக்கிறார்…. மக்கள் மற்றும் போராடி வரும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களிடம் ஒன் டூ ஒன் நடத்த வேண்டும்.

பெரியார் விலை போக மாட்டார் என நினைத்தோ நாடாளுமன்ற தேர்தலின்‌ போது கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெரியார் படத்தை நீக்கி பனைமரம் புகைப்படத்தை வைத்தவர் கனிமொழி.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அ‌.தி‌‌.மு.க‌. கூட்டணி ஆளும் கட்சிக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. அமித்ஷா ஒரு தெளிவான பேட்டி அளித்து உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாக உள்ளது. முதல்வர் தமிழ், தமிழ் என சொல்லி உள்ளார். தூத்துக்குடியில் பாரதியார் வீடு சிதைந்து உள்ளது உதாரணம். சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது போராடுகின்றனர். தமிழக ஆட்சியில் விளம்பரம் மட்டும் செய்து வருகின்றது.

சுகாதாரத்துறை அமைச்சரே தமிழகத்தில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது. அமைச்சர்கள் மிக மிக மோசமாக நடத்து கொண்டு வருகின்றனர்.

போதை தலைநகரமாக தமிழகம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சொல்லி உள்ளார்‌‌. போதை பாதையில் செல்லக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி உள்ளார் அவரே போதையின் பாதைக்கு வழி வகுத்து வருகின்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் இருக்கட்டும் மக்கள் பேரணியில் வந்து தோற்கடிக்க உள்ளனர் என்றார்.