விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஒரு வார காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தருமாபுரம் தெருவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி அன்னதானம் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இன்று தருமபுரம் 27 வது குருமகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ கைலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப் பைகள் மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.
