கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் புனலூர் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் கோவை விரைவு ரயில் ஆகியவை நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கோவை ரயில் நின்று சென்றது. அப்போது குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் பயணிகளை வரவேற்று இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத்தலைவர் ராமமூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் தோவாளை வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஆரல் செல்வமணி எஸ் என் ராஜா வர்த்தக காங்கிரஸ் வட்டார துணை தலைவர் வேதக்கண் ஆரல் பேரூர் தலைவர் ஞானமணி பழனி மாடசாமி சுடலை டேனியல் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.