• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லேப் டெக்னீஷன்னாக உயிரிழந்த விவகாரம்..,

ByB. Sakthivel

Apr 29, 2025

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் முஜிப்பு ரகுமான் லேப் டெக்னீஷன்னாக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பணியில் இருந்தபோது உடைமாற்றும் அறையில் மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகமே சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்த நிலையில் அவரின் இறப்பு சந்தேகமாக இருப்பதாக இரவு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் உடற்கூறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் பிரதிபரிசோதனை செய்தநிலையில் தலையில் அடிபட்டுள்ளது என தெரிவித்ததாக கூறிய நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இறப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை வேண்டும் என கேட்டு ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.