• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை உக்கடம் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு.., பிணத்தை கைப்பிற்றிய போலீசார் தீவிர விசாரனை..

BySeenu

Oct 7, 2024

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு அருகே உள்ள வாலாங்குளத்தில் ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி பொது மக்கள் கண்டு,
உடனடியாக உக்கடம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து
உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரனையில் உயிரிழந்த நபர்,சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், நீண்ட நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலிசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.