• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

2024 ஆம் ஆண்டு மீண்டும் மோடி பிரதமராக வேண்டி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பாஜகவினர்..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று மோடி மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வேண்டியும், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலையின் நடை பயணம் வெற்றி பெற்றதை முன்னிட்டும், மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் கிராமத்தில் கிடாய் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட பொருளாளர் முத்துராம், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, ரவிசங்கர் ,
சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் சாமி, தவமணி, தசரத சக்கரவர்த்தி, சிவராமன் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாநில அணி மற்றும் பாஜக சோழவந்தான் நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.