• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பரிதிமாற் கலைஞரின் பிறந்த தின விழா..,

ByKalamegam Viswanathan

Jul 6, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றி நிறைய தமிழ் நூல்கள் எழுதியுள்ளார் அவரை போற்றும் விதமாக விளாச்சேரியில் உள்ள அவரது இல்லத்தை தமிழக அரசின் நினைவு இல்லமாக மாற்றியது .

அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம் .

இன்று பரிதிமாற் கலைஞரை 155வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார் கலந்து கொண்டனர்.