• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் பிரபலம்

By

Sep 6, 2021 ,

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இதனிடையே நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார்.