நடிகர் சூர்யா கைவசம் கிடைத்த மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவின் விருது வீடியோ வைரலாகி வருகிறது.
‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு மெல்போர்ன் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, சிறந்த திரைப்படமாக மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான விருதை பெற்றுக் கொண்ட சூர்யா, திரைப்படக் குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
சூரரைப் போற்று – சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா
