
கேலோ இந்தியா சென்னை விளையாட்டு போட்டிக்கு பங்கேற்க மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 10 பேர் சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள சிம்சன் நட்சத்திர விடுதியில் உள்ள மின் தூக்கியில் சிக்கி மாட்டிக் கொண்டனர்.
விடுதியின் ஊழியர்கள் கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய குழுவின் நிலைய அலுவலர் போக்குவரத்து வி.ஸ்டீபன் குமார் அவரது தலைமையில் துரிதமாக செயல்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்டனர்.
