தென்காசி குற்றாலம் பராசக்தி நகர் பகுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் குடும்பம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளி, சனி ஞாயிறுகளில் மது பிரியர்கள் விடுதிகள் முன் சாலைகளில் மது அருந்துவதும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து கொண்டு முகம் சுளிக்கும் வகையில் அரைகுறை ஆடைகளுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதவாறு நிறுத்தி அதிக ஒளி சத்தங்கள் எழுப்பக் கூடிய வாகனங்களை வைத்துக்கொண்டு பாட்டு ஒளிபரப்பி வாகனத்தின் முன் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.

அருகில் குடியிருப்புகள் இருக்கிறது முதியோர்கள் இருக்கிறார்கள் ஓய்வு பெற்ற காவலர்கள் இருக்கிறார்கள் ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலர்கள் நேரில் இரண்டு முறை கூறியும் காதிலே வாங்காமல் நீ என்ன சொல்றது என்ற ஆணவத்தோடு மீண்டும், மீண்டும் பாடல்களை சத்தத்தை அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வாசிகள் விரும்புகின்றனர்.
மேலும் ஒன்பது நாட்களாக குளிக்க விடலை… அதற்கே நீங்கள் இந்த ஆட்டம் ஆடினீர்கள் என்றால் தொடர்ந்து பிரதான அருவியை திறந்தால் நீங்கள் எப்படி ஆடுவீர்கள் அதனால்தான் இயற்கை மழை என்ற ரூபத்தில் ஆடுகிறது.













; ?>)
; ?>)
; ?>)