சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

