அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளரும், மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பயில்வான் . சந்தோஷ்குமார் தலைமை வகித்தார்.
நிர்வாகி மணிகண்டன் வரவேற்று பேசினார் இந்த கூட்டத்தில் சாத்தூர் தொகுதியில் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.




